ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் கரை பகுதி மேம்படுத்தப்பட்டு அங்கு நடைபாதை, இருக்கைகள், தண்ணீரில் நடந்து செல்லும் வகையில் மிதவை நடைபாதை உள்ளிட்ட சில அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதை தொடர்ந்து 2024ல் இந்த பகுதியில் பல அதிநவீன வணிக அம்சங்கள் வர உள்ளது.

வாலாங்குள கரைப்பகுதியில் மிதவை நடைபாதைக்கு செல்லும் வழியில் உள்ள பகுதியில் ஸ்மார்ட் ஆபீஸ் வளாகம் அமைக்கவும், ஸ்லீப்பிங் பாட் எனும் நவீன உறங்குமிடம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் இருப்பது போன்ற சொகுசான லவுஞ் (Lounge) எனும் ஓய்வறை, தரமான சொகுசு கஃபே மற்றும் உணவகம், ஸ்னூக்கர்ஸ், கிரிக்கெட் விளையாட புல் தரை, கலைநிகழ்ச்சிகள் நடத்திட சிறு திறந்தவெளி அரங்கம் (amphitheater), அதிநவீன பிலே ஸ்டேஷன் வீடியோ கேம்கள் விளையாடும் மையங்கள் என பலவற்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
இந்த பணிகள் வரும் ஜனவரி 14 முதல் துவங்கப்பட்டு 6 மாதகாலத்தில் நிறைவேற்றிட திட்டமிடப்பட்டுள்ளது. இதை Triumph Expeditions எனும் நிறுவனம் வாலாங்குள கரைப்பகுதியில் அமைக்க உள்ளது. 
இந்த தகவலை அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுரேஷ் குமார் தெரிவித்தார். 


படங்கள்: விளக்கத்திற்காக மட்டுமே