கடந்த சில தினங்கள் கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவை ஒப்பிடுகையில் கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு குறைந்து காணப்படுகிறது.
நேற்று மாவட்டத்தில் எங்கும் கனமழை இல்லாத சூழலில் மொத்தமாகவே 207.60 மில்லி மீட்டர் மழை தான் பெய்து இருப்பதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கு முந்தைய நாள் 900 மில்லிக்கும் அதிகமாகவே மழை பொழிவு பதிவானது.
இன்று நிலைமை என்ன ?
தமிழ் நாட்டில் இன்று (24.5.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் கோவையும் ஒன்று. கோவை உள்பட நீலகிரி, திருப்பூர், தேனீ, திண்டுக்கல், விருதுநகர், மதுரை,தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
என்ன சொல்கிறார் கோவை வெதர் மேன்?
கோவை மாநகரத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பொழியும், குளிர்ச்சியான சூழல் நிலவும் என கூறும் கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன், நாளை முதல் மழை பெரியளவில் குறையும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று வானிலை எப்படி? கனமழைப்பொழிவு இருக்குமா? நேற்று பெய்த மழை அளவு என்ன? இதோ முழு தகவல்
- by David
- May 24,2024