வரும் ஏப்ரல் 27ம் தேதி கோவை 'எல் அண்டு டி' பைபாஸ் அருகே ஜல்லிக்கட்டு நடத்த அரசின் அனுமதி கேட்டு கோவை மாவட்ட நிர்வாகம் முன்மொழிவை அனுப்பிவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 'எல் அண்டு டி' பைபாஸ் அருகே உள்ள 60 ஏக்கர் நிலத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் எனவும், தற்போது இதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்க உள்ளதாகவும் தெரியவருகிறது.

600 மாடுபிடி வீரர்களும், 700 + காளைகளும் இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. களத்தின் அருகேயே வீரர்களுக்கும் மாடுகளுக்கும் தேவையான மருத்துவ உதவிகள் தயாராக இருக்கும் படி திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்று கருதப்படும் நிலையில் இந்த நிகழ்வை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.