கோவை உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஜூன் மாதத்தில் மேம்பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியேறும் இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.
மேம்பால பணிகளுக்காகவும், அப்பகுதியில் வாகன நகர்வுகளை சுலபமாக்கவும் அந்த நிலம் நெடுஞ்சாலைத்துறைக்கு தேவைப்படுவதால் உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள 30 கடைகள் கொண்ட வணிக வளாகம் இடித்து அகற்றப்பட்டு வருகிறது.
உக்கடம் மேம்பால பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள், தனியார் கட்டடங்கள் அகற்றம்!
- by CC Web Desk
- May 23,2024