கோவை மாநகரில் உள்ள முக்கியமான குளங்களில் ஒன்று முத்தண்ணன் குளம். இதை குமாரசாமி குளம் எனவும் அழைப்பார்கள். இது ஆர்.எஸ்.புரம் அருகே 190 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
11.95 சதுர கி.மீ. பரப்பு கொண்ட இக்குளத்தில் 93.90 ஏக்கருக்கு நீர் தேக்கலாம். அதிகபட்சமாக 13 அடி உயரத்துக்கு நீர் தேக்கலாம். இது 10.5 அடி ஆழம் கொண்டது.
இந்த குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் 1.25 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஒரு வாய்க்கால் மூலம் செல்வ சிந்தாமணி குளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டுகளில் இந்த வாய்க்காலின் இரு பகுதிகளிலும் கட்டிடங்கள் பெருகி விட்ட காரணத்தினால் பொக்லைன் எந்திரங்களை வாய்க்கால் பகுதிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் 40 ஆண்டுகளாக இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில் தான் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அண்மையில் முத்தண்ணன் குளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள சவாலான நிலையை பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர் தனியார் நிலங்களின் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று அதன் வழியாக பொக்லைன் எந்திரங்களை கொண்டு சென்று வாய்க்காலை தூர்வாரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கையால் தற்போது நில உரிமையாளர்களிடம் தகுந்த அனுமதி பெற்று ரூ.20 லட்சத்தில் வாய்க்காலை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவையில 40 வருஷமா நடக்காத ஒன்னு மாநகராட்சி ஆணையரின் ஆய்வுக்கு பின் ஜோராக நடக்குது!
- by David
- Aug 07,2023