நாளை கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடக்குமா?
- by David
- Mar 10,2025
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (10.12.2024) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் இக்கூட்டத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி. புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் வழங்கலாம்.
இக்கூட்டத்தில் வழங்கப்படும் கோரிக்கை மனுக்களின் மீது துறைசார்ந்த மாநகராட்சி அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாநகராட்சி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.