கோவை மாநகரத்தில் ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி, ஃபெர்ராரி போன்ற வாகனங்களை பார்த்து மெய்சிலிர்க்கவும் முடியும், அதே நேரத்தில் வழக்கமாக பார்க்கும் வண்டியில் இருக்கும் வாசகங்களை பார்த்து அதிர்ச்சியடையவும் முடியும்.

சில நேரங்களில் வாகனங்களின் பின் பகுதியில் எழுதப்படும் வாசகங்கள் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் அதற்கு ஒரு படி மேலே சென்று, நம்பர் பிளேட்டில் இப்போது வாசகங்கள் இடம்பெறுவது அதிகரித்துள்ளது.

சில வாகனங்களில் அரசு அறிவுறுத்தல்படி வெள்ளை பிளேட்டில் கருப்பு எழுத்துக்கள் இல்லாமல் கருப்பு பிளேட்டில் வெள்ளை எழுத்துக்கள் உள்ளன. சில வாகனங்களின் நம்பர் பிளேட்டில் வாகனத்தின் பதிவு எண்கள் எதுவுமே இல்லாமல் சர்ச்சையான வார்த்தைகள் இடம்பெறுகிறது.

இதுபற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் வாகனத்தை கோவை மாநகரின் பிரதான சாலையிலேயே ஓட்டி செல்கின்றனர் சிலர். இதை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்புகின்றனர்.