பக்தர்கள் கோவை வெள்ளியங்கிரி மலையேறி வருகையில்  திடீரென மலையின் உச்சியில் சுழல் காற்று உருவானதன் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

பக்தர்கள் கோவை வெள்ளியங்கிரி மலையேற பிப்.1 முதல் மே இறுதிவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மலையின் உச்சியில் பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவர்களை ஆச்சரியப்படுத்தும் படி அங்கு சுழல் காற்று உருவாகி சில நிமிடங்கள் நீடித்தது. இதை கண்டு பக்தர்கள் மெய்மறந்து நின்றனர். இந்த காட்சிகள் இன்று வெளிவந்து சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் வைரல் ஆகி வருகிறது.

மலைப்பகுதியில் இதுபோன்ற எதிர்பாராத சுழல் மாற்றங்கள் ஏற்படுவதால் பக்தர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த காட்சியில் சுழல் காற்றை தவிர்த்து மலையை பார்த்தால், அங்கு குப்பைகள் அங்கங்கே சிதறி கிடைப்பதை பார்க்கமுடிகிறது. மேலும் சுழல் காற்றில் குப்பைகள் மேலே தூக்கிவீசப்படுவது தெளிவாக தெரிகிறது.

இயற்கை சூழலை முடிந்தவரை மாசுப்படுத்தாமல் இருக்கவேண்டும் என்ற உணர்வை மக்களிடம் வனத்துறை மீண்டும் மீண்டும் வலியுறுத்தவேண்டிய சூழல் உள்ளது என்பதையும் இந்த காட்சிகள் உணர்த்துகிறது.