கோயம்புத்தூர் மாவட்டம் பாலக்காடு பிரதான சாலையில் மைக்கல் பகுதியில் மேற்கு புறவழிச்சாலையின் திட்டத்தின் முதற்கட்டமாக மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை ரூபாய் 250 கோடி மதிப்பீட்டில் 11.80 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்கு வழி சாலை அமைக்கும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர்ர ஏ.வா.வேலு மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். 

இதன் இரண்டாம் கட்ட சாலை 12.10 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இது பேரூர், சித்திரைச்சாவடி (மேற்கு), வடவள்ளி, சோமையம்பாளையம், கலிக்கநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் அமைகிறது. 

மூன்றாம் கட்ட சாலை  8.52 கிலோ மீட்டர் தூரம் கொண்டது.  இது பண்ணிமடை, நஞ்சுண்டாபுரம், குருடாம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், மற்றும் குடலுர் வழியே அமைகிறது.  

மூன்று கட்டமாக அமைக்கப்படவுள்ள இந்த புறவழி சாலை நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இதனால் கேரளாவில் இருந்து ஊட்டி, மைசூருக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஊட்டி வழியாகவோ அல்லது அங்கிருந்தோ கேரளா துறைமுகத்திற்கு செல்லும் சில லாரிகள் மாநகருக்குள் வர வேண்டிய நிலை இருக்காது. இதனால் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.