கோவையில் இன்று (19.11.24) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதையடுத்து 20-23 ஆம் தேதி (புதன் முதல் சனிக்கிழமை) ஆகிய நாட்களில் மழைக்கு பெரிதளவு வாய்ப்பில்லை. ஆனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதற்கடுத்து 24, 25 ஆகிய தேதிகளில்) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

எப்போது அடுத்து மழைக்கு வாய்ப்புள்ளது?

கொங்கு மண்டலத்தில் நவம்பர் 18 முதல் 25 ஆம் தேதி வரை மழை குறைந்து காணப்படும். 26ம் தேதிக்கு பின்னர் மழை பெய்வது அதிகரிக்கும் என கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார்.