இந்தண்டு கோவையில் பருவமழை இயல்பு வாழ்க்கையில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், கோவைக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகளில் நீர் மட்டத்தை நன்கு உயர்த்தியது.

சரி, மழை எப்போது வரும்? என்று கேட்கும் அனைவருக்கும் கோவை வெதர் மேன் தனது சமீபத்திய வானிலை ஆயவு மூலம் கிடைத்த தகவல்களை வழங்கியுள்ளார்.

இம்மாதம் 20 ஆம் தேதி வரை தற்போது நிலவும் வானிலை நிலைமையே நிலவும் என கூறியுள்ளார். கோவை மாநகரை பற்றி தனியாக குறிப்பிடும் போது, இங்கு வறட்சியான வானிலை நிலவும் எனவும் அதே சமயம் காற்றும் அதிகமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

கொங்கு மணடலத்தை பொறுத்தவரை, இந்த மண்டலத்தின் வடக்கு பகுதிகளில் மட்டுமே மிதமானது மழை பொழிவு ஆங்காங்கே இருக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.