கோவையின் வடக்கு பகுதிகளில் (மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை,பெரியநாயக்கன் பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலூர், கீரனத்தம்) இன்று முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார் கோவை வெதர் மேன் சந்தோஷ். கோவையின் பிற பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.
இதே போல வடக்கு திருப்பூர், ஈரோடு, சேலம்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, நம்மக்கல் ஆகிய பகுதிகளிலும் இன்று முதல் 10 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளார்.
இன்று பிற்பகல் 1:00 மணி முதல் கோவை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கோவையில் துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் சில நிமிடங்களுக்கு நல்ல மழை பெய்தது. பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
கோவையின் இந்த பகுதிகளில் இன்று முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை கனமழையை எதிர்பார்க்கலாம்! - கோவை வெதர் மேன்
- by David
- Oct 04,2024