இது மழை காலம் என்று நம்பிய கோவை மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் படி கடந்த சில நாட்களாகவே கோடை காலம் போல வானிலை மாறி வறுத்தெடுத்து வருகிறது. கோவையில் மழை பெய்யும் காலம் எப்போது துவங்கும் என்று எதிர்பார்த்திருந்த மக்கள் காதில் தேனாக பாயும் ஒரு செய்தியை தெரிவித்துள்ளார் கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் ஆய்வாளர் சுஜய்.
இந்த வார இறுதியில் இருந்து கோவை மற்றும் சுற்று பகுதிகளில் மழை துவாங்க வாய்ப்புள்ளதாக அவர் பதிவிட்டுள்ளர். இதே போல தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜானும்அக்டோபர் மாதத்தின் முதல் வாரம் - இரண்டாம் வார காலத்தில் கொங்கு மண்டலத்தில் மழைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
நாளை முதல் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வெப்பம் தணிந்து நல்ல நிலையில் வானிலை மாற துவங்கும் எனவும் தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதம் தமிழ் நாட்டில் வெப்பம் இல்லாத மாதமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
வறண்ட வானிலை, வெப்பத்தில் இருந்து விடுதலை... மழைக்காலம் கோவை அருகில் வந்தாச்சு!
- by David
- Sep 27,2024