கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் பெறப்படும் பில்லூர் 3ம் குடிநீர் திட்டத்தில் பவானி ஆற்றில் தலைமை நீரேற்று நிலையம் மற்றும் மருதூர் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்கட்டமைப்புகளுக்கான மாதந்திர பராமரிப்பு பணிகள் 08.10.2024 தேதி காலை முதல் செய்யப்படுவதால் அன்று மின்விநியோகம் தடைபடும்.
இதனால் 08.10.2004 காலை 06.00 மணி முதல் மாநகராட்சி பகுதிகளில் பில்லூர் மூன்றாம் திட்டத்தில் குடிநீர் விநியோகம் பெறப்படும் பகுதிகளில் குடிநீர் விநியோக தடை ஏற்படும். அதனைத்தொடர்ந்து, பில்லூர் மூன்றாம் திட்டத்தில் உள்கட்டமைப்புகளில் 09.10.2024 அன்று அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 09.10.2024 மற்றும் 10.10.2024 ஆகிய தினங்களில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
இதன் காரணமாக துடியலூர்,வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, காளப்பட்டி, விளாங்குறிச்சி, கவுண்டம்பாளையம்,வடவள்ளி, குறிச்சி, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபடும்.
எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
அக்டோபர் 8 முதல் 10 வரை கோவையில் இந்த இடங்களில் குடிநீர் விநியோகம் தடைபடும்!
- by David
- Oct 05,2024