கோடை 2025: கோவைக்கு மிகவும் முக்கியமான அணைகளில் போதுமான அளவு நீர் உள்ளதா?
- by David
- Mar 12,2025
கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, பில்லூர் 3, ஆழியார் மற்றும் பவானி ஆகிய ஆறு குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது இந்த திட்டங்களுக்காக நீர் எடுக்கப்படும் அணைகளில் நீர்மட்ட எந்தளவு உள்ளது என்பதை கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, சிறுவாணி அணையின் மொத்த அளவு 49.53 அடியாகும். ஆனால் 44.61 அடிவரை நீரை தேக்க முடியும். தற்போது அணையின் நீர்மட்டம் 30.47 அடியாக உள்ளது என கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.பில்லூர் அணையின் மொத்த அளவு 100 அடியாகும். தற்போதைய அணையின் நீர்மட்டம் 80 அடியாக உள்ளது. அதேபோல ஆழியார் அணையின் மொத்த அளவு 120 அடி, இதில் நீர்மட்டம் 73.45 அடியாக உள்ளது.
மேற்கண்ட அணைகளில் தற்போது போதிய அளவு நீர் இருப்பு உள்ளது. தினமும் சராசரியாக சுமார் 290 எம்.எல்.டி சேகரம் செய்து, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் தற்போது போதிய நீர் ஆதாரம் உள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.