பருவமழை துவங்கி நல்ல அளவில் கோவை மாவட்ட பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பெய்து வருகிறது.

அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 35.35 அடியாக இருந்த நிலையில் இன்றைய நிலவரப்படி அணையின் நிர்மட்டம் 38.67 அடியாக உள்ளது. ஒரே நாளில அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது. வரும் சனிக்கிழமை வரை கோவை மாவட்ட பகுதிக்கு நல்ல மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த அளவு மேலும் உயர வாய்ப்புள்ளது.

பில்லூர் அணை முற்றிலுமாக நிறைந்துள்ள நிலையில், அதிலிருந்து 15,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கோவை மாநகருக்கு குடிநீர் தட்டுப்பாடு என்பது அடுத்த சில மாதங்களுக்கு அறவே இருக்காது என்று நம்பலாம். 

படம் விளக்கதிற்காக மட்டுமே