கோவை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அண்மையில் வெளியானதை தொடர்ந்து அதில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் பெயர், வயது உள்ளிட்டவை மேற்கொள்ளுதல் மற்றும் வாக்காளர் பெயருடன் ஆதார் எண் இணைத்தல் ஆகிய சிறப்பு சுருக்கத் திருத்தப்பணிகள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே இதற்காக வாக்காளர்கள் 29.10.2024 முதல் 28.11.2024 பிற்பகல் முடிய உள்ள காலம் வரை விண்ணப்பங்களை நேரில் அளிக்கலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2025யை  முன்னிட்டு வருகின்ற 16.11.2024 (சனிக்கிழமை), 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 23.11.2024 (சனிக்கிழமை), 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

எனவே, 01.01.2025-ஆம் தேதியில் 18 வயதினைப் பூர்த்தி செய்பவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை புதியதாக சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்யவும், மற்றும் பெயர்கள் நீக்கம் செய்யவும் வேண்டுபவர்கள் www.vsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் மற்றும் ஆதார் எண் இணைத்திட 28.11.2024 வரை மனுக்கள் பெறப்படும்.

கூடுதல் தகவல் கீழே :