இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2025யை முன்னிட்டு வருகின்ற 23.11.2024 (சனிக்கிழமை), 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இந்த நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய் தல் மற்றும் ஆதார் எண் இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன.
இது தொடர்பான விண்ணப்ப படிவங்களை, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில், வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இருந்து பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அதே வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6,அயல்நாடு வாழ்வாக் காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க படிவம்-6ஏ, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க படி வம்-6பி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய படிவம்-8 ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, 1.1.2025ம் தேதி அன்று 18 வயதினை நிறைவு செய்யும் வாக்காளர்கள் மற்றும் இதர பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பான முதல்கட்ட சிறப்பு முகாம் கோவை மாவட்டம் முழுவதும் 3,117 வாக்குச்சாவடிகளில் நவம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் நடந்தது. இதில், பெயர்சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக 36,216 மனுக்கள் குவிந்தன.
அறிவிப்பு: கோவையில் நாளை மற்றும் ஞாயிறு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது!
- by David
- Nov 22,2024