கோவை வ. உ.சி. பூங்கா சாலையில் ரூ.1 கோடியில் 24 கடைகளை உள்ளடக்கிய சுகாதாரமான உணவுத்தெருவை நாளை காலை 10 மணிக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு மற்றும் கோவை மாநகராட்சி இனைந்து உருவாகியுள்ள இந்த உணவு வீதியில் உள்ள கடைகள் டெண்டர் அடிப்படையில் தனியார் உணவு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.