கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவருக்கு  இரண்டாம் ஆண்டிற்கான  "அ.முத்துலிங்கம் விருது" 2024 அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுத் தொகை ஒரு லட்சம் மற்றும் கேடயமும் வழங்கப்பட உள்ளது. 

கடந்தாண்டு திரு.ஜெயமோகன் எழுதிய அறம் தொகுப்பை மொழியாக்கம் செய்த திருமதி. பிரியம்வதா ராம்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த 2024 ஆம் ஆண்டு விருதுக்கு நடுவர் குழு பரிந்துரையின் பெயரில் பேராசிரியர்   ச. தில்லைநாயகம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

பல்லாண்டுகள் அவர் ஆற்றியிருக்கிற மொழிபெயர்ப்புப் பணிக்காக இவ்விருது அவருக்கு அளிக்கப்படுகிறது.

2024 ஜனவரி-28 ஞாயிறு மாலை நடைபெறும் விழாவில் உயர்நீதிமன்ற நீதியரசர் GR. சுவாமிநாதன் தலைமையேற்று ச.தில்லைநாயகம் அவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கிறார். இந்த விருது தொகையை காரமடை சவீதா மருத்துவமனை மருத்துவர் டாக்டர் சசித்ரா தாமோதரன் அவர்கள் வழங்கி கௌரவிக்கிறார்கள்.