கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தற்போது கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவிலில் நாளை மறுநாள் (18.11.23) சூரச சம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கு பெரும் திரளாக பக்தர்கள் கூட்டம் வரும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, நாளையும், நாளை மறுநாளும் மட்டும் மலைப்பாதையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
அன்றைய தினம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பஸ்களிலும், படிக்கட்டு வழியாகவும் சென்று சாமியை தரிசிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவல் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.