கோவை மருதமலையில் பிப்ரவரி 20 முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு!
- by David
- Feb 18,2025
Coimbatore
கோவை மருதமலை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல வரும் பிப்ரவரி 20 முதல் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடமுழுக்கையொட்டி பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை கார்களுக்கு மலைப்பாதையில் அனுமதி கிடையாது எனவும் பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 6 வரை வரும், செவ்வாய், ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை, கிருத்திகை தினத்தில் இரண்டு சக்கர வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது என தகவல் வெளியாகி உள்ளது.