கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள் அன்று மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் நடைபெறும். இதில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், வால்பாறை போன்ற மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனு அளிக்க வருவது வழக்கம். இன்று அதேபோல மக்கள் மனு வழங்க வந்தனர்.

இந்நிலையில் முக்கடலும் சந்திக்கும் கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து வெள்ளி விழா நிகழ்ச்சி உலகத் தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.  அதனை அங்கு மனு வழங்க வந்த பொதுமக்கள் கண்டு செல்பி எடுத்து மகிழ்ந்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து மகிழ்ந்து வருகின்றனர்.