பருவமழை காலம் துவங்கி பல நாட்கள் ஆகியும் கோவை மாநகரில் மட்டும் மழையை காணவில்லை. மாவட்ட பகுதிகளின் சில இடங்களில் மழை பெய்கிறதே தவிர மாநகரில் சாரல் மட்டும் தான் இதுவரை பெய்துவருகிறது.

இனிமேலாவது மாநகரில் நல்ல மழை பெய்யுமா என்ற கேள்வியை கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணனிடம் முன்வைத்ததற்கு, அவர் கூறியது பின்வருமாறு:-

அடுத்த 2 வாரங்களுக்கு, அதாவது ஜூலை 20 வரை, இப்போது பகல், மதிய நேரங்களில் நிலவும் வெயில் நீடிக்கும், மாலை முதல் இரவு நேரங்களில் காற்று கொஞ்சம் குளிர்ச்சியுடன் வீசும். சரவணம்பட்டி, காளப்பட்டி,பெரியநாய்க்கன்பாளையம் போன்ற இடங்களில் சில நாட்கள் லேசாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இம்மாதம் (ஜூலை 2024) இறுதி வாரம் முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை சாரல் மழை தான் மாநகரில் பெய்யும். செப்டம்பர் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை கோவை மாநகரில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.