உக்கடம் மேம்பால திட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் அதற்கு வண்ணம் பூசும் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இந்த பணிகளும் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இவை ஜூலை 16 ஆம் தேதிக்குள் நிறைவடைய வாய்ப்புள்ளது. 

உக்கடத்தையும் சுங்கத்தையும் இணைக்கும் ஏறு தளம், இறங்கு தளம் அமைக்கும் பணிகள் மட்டும் தான் மீதம் உள்ளது. அதுவும் இப்போது நடைபெற்று வருகின்றன. 

கடந்த ஜூன் மாதம் பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதற்கடுத்து இந்த மேம்பாலத் திட்டத்தின் நிறைவு குறித்து தகவல்களை கோவை மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருந்தது.

ஜூன் மாத இறுதிக்குள் திறப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் சோதனை ஓட்டம் மற்றும் திறப்பு தள்ளிப்போய் கொண்டே உள்ளது.

உக்கடம் சாலை சந்திப்புகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது என்பதால் போக்குவரத்தை மேலே செல்ல அனுமதித்தால் தான் அதை செய்ய முடியும் என்ற சூழல் இருக்க, மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் துவங்க குறைந்தது 15 நாட்களாவது ஆகும் என தெரியவருகிறது.