கோவையில் பாஜக அலுவலகத்தை திறந்து வைக்க வரும் பிப்ரவரி 25ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தரவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

 

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை கூறுகையில், வரும் 25ஆம் தேதி கோவைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தரவுள்ளார். 

 

அதற்கு மறுநாள், கோவையில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்து, அன்று மாலை கோவை ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என கூறியுள்ளார்.