கோவை உக்கடம், புல்லுக்காடு பகுதியில் உள்ள சூரிய மின்னாற்றல் உற்பத்தி மையம் அருகில் மாநகராட்சி தரப்பில் புதிதாக விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் புல்லுக்காடு பகுதியில், ரூ.6.90 இலட்சம் மதிப்பீட்டில் 1.09 ஏக்கர் பரப்பளவில் 1.00 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இதற்கு முன்னர் இருந்த மண்மேடுகள் சமன் செய்யப்பட்டு, குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட காலியிடத்தில் 270.00 மீட்டர் நீளத்திற்கு முள்கம்பிவேலி அமைக்கப்பட்டு இரும்பு கதவுகள் பொருத்தப்பட்டு, அங்கு விளையாட்டு மைதானம் முழுமையாக கட்டப்பட்டுள்ளது.
இதை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் .சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
கோவை உக்கடம் பகுதியில் புது விளையாட்டு மைதானம் திறப்பு!
- by David
- Sep 23,2024