கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமையன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
கேபிஆர் குழுமத்தின் தலைவர் கே பி ராமசாமி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தாட்வர்க்ஸ் நிறுவனத்தின் நிகிதா ஜெய்ன் மற்றும் கௌரவ விருந்தினராக நேபாள் தூதரகத்தின் கலாச்சார ஆலோசகர் கோகுல் பாஸ்னேட் ஆகியோர் பங்கேற்றனர்.
முதலாவதாக கல்லூரி முதல்வர் த சரவணன் ஆண்டறிக்கையை வாசித்தார். மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய நிகிதா சிறப்புரையாற்றினார்.
விழாவில் 8 இளநிலை துறைகளிலிருந்து 955 மாணவர்கள், 4 முதுநிலை துறைகளிலிருந்து 51 மாணவர்கள், மற்றும் 4 முனைவர் பட்டதாரிகள் என 1010 பேர் பட்டம் பெற்றனர். கல்லூரி அளவில் முதலிடம் பிடித்த மாணவிகள் சந்திரகௌரி (இளநிலை கட்டடப் பொறியியல்), கோகிலா (இளநிலை வேதிப் பொறியியல்), மற்றும் தீபிகா (முதுநிலை கணினி அறிவியல் மற்றும் பொறியியல்) ஆகியோருக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், ஒவ்வொரு துறையிலும் தரவரிசையில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவில் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.