2026 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, கோவையில் தமிழக வெற்றி கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் இம்மாதம் நடக்கிறது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் கூறியதாவது :-

நமது கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம், வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் (26.04.2025 & 27.04.2025) தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில், குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கருத்தரங்கில், நம் வெற்றித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கழகம் சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.