கோவை மாவட்ட காவல்துறையினர் தங்களை தரக்குறைவாக நடத்துவதாக கூறி கோவை கலெக்டரிடம் புகார் அளிக்க திருநங்கைகள் பெருமளவில் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தது பொதுமக்களின் கவனத்தை பெற்றது.

கலெக்டர் அலுவலகத்திற்கு பெரும் கூட்டமாக வந்த அவர்கள், கோவை மாவட்ட காவல்துறையினர் தங்கள் மீது ஏதாவது புகார் வந்தால் அதுபற்றி எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளாமல் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்வதாக அவர்கள் குற்றம்சாட்டினார் மேலும் தங்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் முறையானதாக இல்லை எனவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். 

100க்கும் அதிகமான திருநங்கைகள் வந்ததால் அவர்களிடம் போலீசார் பேசி சிலரை மட்டும் கலெக்டரிடம்  மனு அளிக்க அனுமதித்தனர்.