கோவையின் இந்த பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்! பஸ், காரில் செல்பவர்கள் கவனத்திற்கு...
- by David
- Mar 12,2025
காரமடை அரங்கநாதா் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு கோவையில் இன்றும் (12.3.25) நாளையும் (13.2.25) இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது :-
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் லாரிகள், பேருந்துகள் மற்றும் காா்கள் அனைத்தும் கோட்டைப் பிரிவு கடந்து சக்தி பொறியியல் கல்லூரி வளைவில் இடதுபுறம் திரும்பி பி.ஜி. புதூா், திம்மம்பாளையம் மற்றும் தோலம்பாளையம் ரயில்வே கேட்டில் இடதுபுறம் திரும்பி மங்களக்கரைபுதூா் வழியாக டீச்சா்ஸ் காலனி வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் வாகனங்கள் காந்தி நகா் அருகே இடதுபுறம் திரும்பி தொட்டிபாளையம், கண்ணாா்ப்பாளையம், களத்தியூா் ரயில்வேகீழ் பாலம் வழியாக கோட்டைப் பிரிவு சென்று கோவை செல்ல வேண்டும்.
கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து கன்டெய்னா் லாரிகளும் கோட்டை பிரிவு, களத்தியூா் ரயில்வே கேட், கண்ணாா்பாளையம் நான்கு வழி சந்திப்பு, தென் திருப்பதி, நால்ரோடு வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும்.
மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வரும் அனைத்து கன்டெய்னா் லாரிகளும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து அன்னூா் செல்லும் சாலை வழியாக தென்திருப்பதி நால்ரோடு சென்று வலதுபுறம் திரும்பி கண்ணாா்பாளையம், களத்தியூா் ரயில்வே பாலம் வழியாக கோவை வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.