பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா நாளை (10.2.25) காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் நடைபெற உள்ளதால், பேரூர் சாலையில் நாளை அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 

 

போக்குவரத்து மாற்ற விவரங்கள்:-

 

பேரூருக்கு மேற்கே தொண்டாமுத்தூர், ஆலந்துறை, மாதம்பட்டி, செம்மேடு, பூண்டி, காருண்யா நகர் ஆகிய புறநகர் பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பேரூர் செட்டிபாளையம் அருகே கோவைபுதூர் மெயின் ரோடு வழியாக திருப்பி விடப்படும். 

 

காந்திபுரம், ரயில் நிலையம், டவுன்ஹால் பகுதியில் இருந்து பேரூர் நோக்கி பேரூர் மெயின் ரோட்டின் வழியே வரும் பேருந்துகள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் செல்வபுரம் சிவாலயா பஸ் ஸ்டாப் அருகே புட்டுவிக்கி வழியாக சுண்டக்காமுத்தூர் மெயின் ரோடு வழியாக திருப்பி விடப்படும்.