கோவை மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்
- by David
- Apr 02,2025
கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் ஏப்ரல் 4ம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. எனவே 3.04.2025 மதியம் 2.00 மணி முதல் 6.04.2025 இரவு 9.00 மணி வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களில் மருதமலை வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை வடவள்ளி, தொண்டாமுத்தூர் சந்திப்பு வழியாக மகாராணி அவென்யு, சின்மயா வித்யாலயா கடந்து சென்று அஞ்சனூர் பிரிவில் வலது புறம் திரும்பி, கல்வீரம்பாளையம் மருதமலை ரோடு சந்திப்பை அடைந்து, இடது புறம் திரும்பி பாரதியார் பல்கலைக் கழகம் வரை வரலாம்.
இந்த இடம் வரை மட்டுமே பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். அங்கிருந்து மலைக்கு மேல் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை.
பாரதியார பல்கலைக்கழகத்திலிருந்து திரும்பி வரக்கூகூடிய வாகனங்கள் மருதமலை ரோடு, கல்வீரம்பாளையம் சந்திப்பு, நவாவூர் பிரிவு, வடவள்ளி ரவுண்டானாவிலிருந்து இடதுபுறம் திரும்பி இடையர்பாளையம் சந்திப்பு வழியாகவும், வடவள்ளி தொண்டாமுத்தூர் சந்திப்பு வந்து தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி வழியாகவம் மாநகருக்குள் செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஒத்துழைப்பை அளிக்குமாறு கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.