சேலம்-கொச்சின் சாலையில் ரயில்வே 'கீழ்ப்பாலம்' கட்டும் பணி காரணமாக கோவையில் போக்குவரத்து மாற்றம்
- by David
- Mar 13,2025
சேலம்-கொச்சின் சாலையில் ரயில்வே கீழ் பாலம் கட்டும் பணிகள் காரணமாக கோவையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
மரப்பாலத்தில் உள்ள ரயில்வே கீழ் பாலத்தை திரும்ப கட்டும் பணி நடக்க உள்ளதால் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். இதனால் கீழ் பாலம் வழியாக க.கா.சாவடி, வாளையாறு, பாலக்காட்டுக்கு கனரக லகர வாகனங்கள் செல்ல முடியாது.
மேலும் பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் மதுக்கரை சந்திப்பில் கி.மீ 168/4 இடது புறம் திரும்பி குவாரி ஆபீஸ் சாலை குரும்பபாளையம் சாலை மதுக்கரை மார்க்கெட் சாலை, செட்டிபாளையம் சாலை வழியாக கி.மீ 170/8 செட்டிபாளையம் பிரிவுக்கு செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் மேற்படி சாலையில் செல்ல அனுமதி இல்லை.
மேலும் வாளையாறு மற்றும் பாலக்காட்டிலிருந்து, கோவை, குனியமுத்தூர், உக்கடம் செல்லும் பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் செட்டிபாளையம் பிரிவு, விறகுக்கடை பாலம் வழியாக சென்று ACC CEMENT FACTORY சாலை வழியாக செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் மேற்படி சாலையில் செல்ல அனுமதி இல்லை.
மேலும் கோவையில் இருந்து க.கா. சாவடி, வாளையாறு மற்றும் பாலக்காடு செல்லும் கனரக வாகனங்கள் ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி குறிச்சி, ஈச்சனாரி சாலை வழியாக சென்று (NH 544) சேலம் - கொச்சின் சாலையில் கற்பகம் காலேஜ் சந்திப்பில் வலது புறம் திரும்பி செல்ல வேண்டும். மேலும் வாளையாறு மற்றும் பாலக்காட்டிலிருந்து NH544 ல் கோவைக்கு வரும் கனரக வாகனங்கள் கற்பகம் காலேஜ் பொள்ளாச்சி சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி NH 948 ல் ஈச்சனாரி, குறிச்சி சாலை வழியாக ஆத்துபாலம் சந்திப்புக்கு செல்ல வேண்டும்.