கோவை சாய் பாபா காலனி மேம்பால பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யபடுகிறது!
- by David
- Feb 07,2025
Coimbatore
கோவை மேட்டுப்பாளையம் சாலை வழியே சாய் பாபா கோவில் வழியே வரக்கூடிய முருகன் மில்ஸ் முதல் எருக்கம்பெனி வரை உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணியில் கான்கிரீட் தூண்களின் மீது Gider Beam-கள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்ய படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 06.02.2025 முதல் 28.02.2025 வரை இரவு 11.00 மணி முதல் காலை 05.00 மணிவரை போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்திலிருந்து கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூர் நோக்கி செல்லும் வாகனங்கள் என்.எஸ்.ஆர் சாலை வழியாக திருப்பி விடப்படும். கவுண்டம்பாளையத்திலிருந்து அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் நோக்கி செல்லும் வாகனங்கள் சங்கனூர் பாலம் அருகே உள்ள சங்கனூர் சாலை வழியாக திருப்பி விடப்படும்.