வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உள்ள ரொட்டிக்கடை பகுதியருகே இரவு நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள வனத்து சின்னப்பர் கோவில் அருகில் சாலையின் ஓரத்தில் உள்ள கட்டிடத்தில் சிறுத்தை ஒன்று படுத்திருந்துள்ளது. 

இதை பார்த்த சுற்றுலா பயணிகள் அவர்களுடைய மொபைல் போனில் அதை வீடியோ பதிவு செய்துள்ளனர். வாகனத்தைக் கண்ட சிறுத்தை கட்டடத்திற்கு பின் சென்று சாலை வழியே நடந்து குடியிருப்பு பகுதிக்குள் சென்றுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி உள்ளது.

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லக்கூடிய சாலையில் புது தோட்டம், ரொட்டிக்கடை, கவர்கள், வாட்டர் பால்ஸ், அட்டகட்டி ,போன்ற பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் எனவும் இரண்டு சக்கர வாகனத்தில் வருவோர்கள் கனரக வாகனங்களுக்கு பின்பாக வரவேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.