2022க்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் மாநிலத்தின் பல முன்னணி அணிகளை கொண்டு கடந்த ஜூன் மாதம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் வரும் ஜூலை 10 ஞாயிறு முதல் கோவையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள எஸ்.என்.ஆர் கிரிக்கெட் மைதானத்தில் தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெறவுள்ளது.

கோவை ஸ்.என்.ஆர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள்:

ஜூலை 10 நெல்லை v திருப்பூர், மற்றும் கோவை v திருச்சி. ஜூலை 11 சேலம் v மதுரை, ஜூலை 12 சென்னை v கோவை, ஜூலை 13 திருப்பூர் v சேலம், ஜூலை 15 நெல்லை v திருச்சி, ஜூலை 16 கோவை v திருப்பூர் மற்றும் சென்னை v திண்டுக்கல்.

ஜூலை 29 இரண்டாவது குவாலிபையர், மற்றும் ஜூலை 31 பிரமாண்ட இறுதி போட்டி.

இதற்கு முன்னர் கோவையில் பல பெருமைமிகு போட்டிகள் நடைபெற்று இருந்தாலும், 27 ஆண்டுகளுக்கு முன்னர் ஈரோடு லயன்ஸ் கிளப் ஏற்படுத்திய ஒரு நிகழ்விற்காக இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள உச்ச நட்சத்திரங்கள் கோவை நேரு ஸ்டேடியம் மண்ணில் கால் பதித்தன. அது ஒரு-நாள் போட்டி. அதில் கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் விளையாடி இருந்தார். அவருடன் எஸ்.என்.ஆர் சான்ஸ் காலேஜ் இன் வேகப்பந்து வீச்சாளர் கண்ணனும் இனைந்து விளையாடினார். கோவை மண் கண்ட மிக பெரிய கிரிக்கெட் போட்டியாக அது அமைத்தது.

கிரிக்கெட் பிரியர்களுக்கு அது மிகப்பெரிய மலரும் நினைவாக இருந்தது. கிரிக்கெட் மீது கோவை என்றுமே மிகப்பெரும் அன்பு வைத்துள்ளது. கோவை கொடிசியா மைதானம் பகுதியில், VOC மைதானத்தில் காலை இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் விளையாடுவதே இதற்கு சான்றாக அமையும்.

இந்த மண்ணிலிருந்து சிலர் மாநில கிரிக்கெட் அணிக்கும், TNPL மற்றும் IPL அணிக்கும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெகுநாட்களுக்கு பின்னர் இந்த மாவட்டம் பார்க்கப்போகும் அடுத்த பெரிய விளையாட்டு வரும் ஞாயிறு நடைபெறவுள்ளது.