கண்களுக்கு விருந்தளிக்கும் 7வது கோவை மலர் கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்கள்!
- by David
- Feb 08,2025
Coimbatore
தமிழக மின்சார துறை அமைச்சரும் கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 7வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
மொத்தம் 2 லட்சம் மலர்கள் கொண்டு நடைபெறும் இந்த கண்காட்சி பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். இதில் பல்வேறு வகை மலர்களைக் கொண்டு கண்ணை கவரும் வகையில் பல நிறங்களில் மலர் வடிவங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
ரோஜா, ஆர்கிட், மல்லிகை, செண்டுமல்லி, சம்மங்கி, கனகாம்பரம், தாமரை, செவ்வந்தி மற்றும் பல்வேறு அரிய வகை மலர்களைக் கொண்டு வானவில், பட்டாம்பூச்சி உள்ளிட்ட பல்வேறு கலைநயம் மிக்க வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.