கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கு பிப்ரவரி 17ஆம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இந்த அனுமதி நேற்றுடன் (மே 31)  நிறைவடைந்துவிட்டது. 

இதனால், வெள்ளியங்கிரி மலையில் ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று வனத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

நேற்று மாலையே, மலைக்குச் செல்வதற்கான படியில் உள்ள இரும்புக் கதவு பூட்டப்பட்டது.வனத்துறை மற்றும் கோயில் சார்பில், மலையில் ஏற அனுமதியில்லை என்ற அறிவிப்புப் பலகையும், கதவருகே வைக்கப்பட்டுள்ளது.