கோவை-டு-சேலம் 'ஆர்.ஆர்.டி.எஸ்'. ரயில் சேவை வழங்க சாத்தியமுள்ளதா என ஆராயும் பணிக்கு டெண்டர் கோரியது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்!
- by David
- Mar 27,2025
Coimbatore
2025 தமிழக பட்ஜெட்டில், கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் வழித்தடத்தில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் மித அதிவேக ரயில்வே மண்டல விரைவுப்போக்குவரத்து அமைப்பு (Regional Rapid Transit System - RRTS) அமைக்க வாய்ப்புள்ளதா என்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. இந்தியா முழுவதிலிருந்தும் இதற்கான டெண்டர்களை தகுதியுடைய நபர்களிடம் இருந்து வரவேற்பதாக தெரிவித்துள்ள சென்னை மெட்ரோ ரயில் நிலையம், டெண்டர்கள் தொடர்பான தகவல்களை இனைய வழியே வரும் ஏப்ரல் 2 தேதி முதல் பெறலாம் எனவும் டெண்டரை 2.5.2025 மதியம் 3 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.