கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மைய கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. விருப்பம் உள்ள நிறுவனங்கள் அக்டோபர் 16ம் தேதி மாலை 3 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழிப் பூங்கா அமைந்து வரும் வளாகத்திற்கு அருகே இந்த நூலகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நூலகத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை கோவை மாவட்ட நிர்வாகம் பார்த்துக் கொள்ளும் எனவும் நூலகத்தை கட்டக்கூடிய பணிகளை தமிழக அரசின் பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் எனவும் தெரிய வருகிறது. நூலகம் கட்டி முடித்த பின்பு அதன் பராமரிப்பை கோவை மாநகராட்சி மேற்கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் கலைஞர் நூலகத்திற்கான கட்டுமான பணிக்கு டெண்டர் அறிவிப்பு
- by CC Web Desk
- Sep 10,2024