கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியில் தார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருவதால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசடைந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் எனவே அந்த தார் தயாரிக்கும் தொழிற்சாலையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த தார் தொழிற்சாலை சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக தெரிவித்த அப்பகுதி மக்கள் அதனால் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் வருவதாகவும் குழந்தைகள் முதியவர்கள்  சிரமப்படுவதாகவும் விவசாய நிலங்கள், கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.