இன்று சித்திரைக்கணி - தமிழ் புத்தாண்டு என்பதால் கோவை மாநகர், புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

இந்த கோயிலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய, ஓரே கல்லால் ஆன அழகான தோன்றத்துடன் கூடிய 19 அடி உயர, 190 டன் எடை கொண்ட விநாயகர் சிலை உள்ளது.

 

இந்த சிலை இன்று 2 டன் எடையில் முக்கனிகளான மா, பலா, வாழை உட்பட அண்ணாச்சி, மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆப்பிள் உள்ளிட்ட பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலில் நடைபெறும் பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.