கோவை சுக்ரவார் பேட்டை சாலை முதல் தெலுங்கு வீதி வரை 24×7 திட்டத்தின்கீழ் குடிநீர் குழாய் பதிக்க வேண்டிய காரணத்தால் இன்று (07.09.2023) இரவு 10 மணி முதல் ஞாயிறு (10.09.2023) இரவு 10 மணி வரை சுக்ரவார் பேட்டை வழியாக காந்திபார்க் செல்லும் கனரக வாகனங்கள் மேட்டுப்பாளையம் சாலை, திருவேங்கடசாமி சாலை வழியாக தடாகம் சாலை அடைய வேண்டும்.

மேலும் தெலுங்கு வீதி வழியாக ராஜ வீதி செல்லும் கனரக வாகனங்கள் டவுன்ஹால் வழியாக செட்டி வீதி அடைந்து சலீவன் வீதி வழியாக காந்திபார்க் செல்ல வேண்டும். எனவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.