கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணையின் மொத்த உயரமான 100 அடியில் நீரின் அளவு 90 அடியாக உள்ளது என தகவல்கள் கூறுகின்றன. இதனால் கோவை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவ வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவ மழைக்காலம் கோவை மாவட்ட பகுதிகளில் துவங்கி உள்ள நிலையில், கோவையில் நேற்று மொத்தம் 352 மி.மீ மழை பொழிவு பதிவாகியுள்ளது என பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

சிறுவாணி அடிவாரத்தில் 9 மி.மீ மழை பதிவானது. சின்கோனாவில் 37 மி.மீ, சின்னக்கல்லாரில் 78 மி.மீ, வால்பாறை பி.ஏ.பி.யில் 63 மி.மீ, வால்பாறை தாலுக்காவில் 58 மி.மீ மற்றும் மற்றும் சோலையாரில் 33 மி.மீ மழை பொழிந்தது. ஆனால் மாநகர பகுதிகளில் மிக குறைந்த நேரத்திற்கு சாரல் மழை மட்டுமே பெய்தது குறிப்பிடத்தக்கது.