கோவையில் பைக் ரேஸ், கார் ராலி, கூடைப்பந்து, கால்பந்து, தடகள விளையாட்டுகள் போன்ற விளையாட்டுகளை விளையாட அரசு கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இப்போது ஒண்டிப்புதூர் பகுதியில் கிரிக்கெட்டுக்கும் பிரம்மாண்ட மைதானம் உருவக உள்ளது.
ஆனால் ஹாக்கி விளையாட்டு மற்றும் போட்டிகள் நடத்த அரசின் விளையாட்டு மைதானம் இதுவரை இல்லாத சூழலில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தை ஒட்டியுள்ள மைதானத்தில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் ரூ.9.67 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டதன் அடிப்படையில், இந்த திட்டம் விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில், தமிழக துணை முதலமைச்சர் ஸ்டாலின் வரக்கூடிய வாரங்களில் கோவைக்கு வருகை தந்து இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
6,500 சதுர அடியில் அமையும் இந்த மைதானம் சர்வதேச தரத்துடன் இருக்கும். இதில் 300 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதிகள், தேவையான பார்க்கிங் வசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும். கோவை மாநகராட்சி தரப்பில் கட்டபடவுள்ள இந்த மைதானத்திற்கு ஒப்பந்ததாரர் இறுதியாகி உள்ளார் எனவும் விரைவில் பணி ஆணை வழங்கப்படவுள்ளது எனவும் பணிகள் துவங்கி 1 ஆண்டில் நிறைவடையும் எனவும் தெரியவருகிறது.
அடுத்த வாரத்தில் நகராட்சி நிர்வாக அமைச்சர் நேரு மற்றும் கோவையின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் இந்த மைதானம் உருவாக உள்ள இடத்தில் ஆய்வு நடத்த உள்ளதாக தகவல் உள்ளது.
கோவைக்கு முதலமைச்சர் அறிவித்த மைதான திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வருகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
- by David
- Nov 16,2024