கோவை பச்சாபாளையத்திலுள்ள இயங்கிவரும் எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் அறக்கட்டளையின் ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் 18 ஆவது பட்டமளிப்பு விழா இன்று காலை 10.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமையேற்றார்.

சிறப்பு விருந்தினராக திரு. முரளிநாகராஜ், பொதுமேலாளர் – பராமரிப்பு, கம்மின்ஸ் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட். லிமிடெட்,  புனே அவர்கள் கலந்துகொண்டு 350 மாணவ மாணவியர்களுக்குப் பட்டங்களை வழங்கி தனது சிறப்புரையில்  “மாணவமாணவியர் எதிர்வரும் தொழில் தேவைகளுக்கு ஏற்ப அவர்அவர் தம்முடைய தனிப்பட்ட தனித்திறமைகளை வளர்த்து வாழ்வில் வளம்பெறவேண்டும்” என்றும் “கற்றலும் கடின உழைப்பும் வெற்றிக்கான திறவுகோல்”  என்றும் கூறினார்.  

இவ்விழாவில் கல்வியில் சிறந்து முதலிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தங்கப்பதக்கமும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னதாக விழாவின் வரவேற்புரையை கல்லூரி முதல்வர் ஜே.டேவிட் ரத்தினராஜ் வழங்கினார்.

இவ்விழாவில் எஸ்.என்.ஆர்.சன்ஸ்.அறக்கட்டளையின் இயக்குனர் (கல்வித்துறை) என்.ஆர். அலமேலு மற்றும் பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.