ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி, ஹேக்கப் டெக்னாலஜி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- by CC Web Desk
- Feb 06,2025
கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், ஹேக்கப் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டன.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் திரு ஆர்.சுந்தர், ஹேக்கப் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவன நிறுவனர் மற்றும் இயக்குநர் திரு பி.தினேஷ் ஆகியோர், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை அலுவலகத்தில் 5.02.2025 அன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கையொப்பமிட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் வகையிலான பயிற்சிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், குறுகியகால ஆய்வுகள் மேற்கொள்ள உரிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
ஆராய்ச்சி மற்றும் சைபர் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், சைபர் பாதுகாப்பை விரிவுப்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தொழில்துறை மற்றும் கல்லூரி கல்விக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க துல்லியனமான அறிவாற்றல் பயன்படுத்தப்படும்.
தொழில்துறையின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில், பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். குறுகிய கால பயிற்சி திட்டங்கள் நடத்தப்படும். மாணவர்கள் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படும். ஆராய்ச்சி, ஆராய்ச்சித் திட்டங்களுக்கான முன்மொழிவுகளுக்கு உரிய ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் அளிக்கப்படும். மேலும், பொது அறிவுப்பகிர்வு, தொழில்துறையில் ஆராய்ச்சி வாய்ப்புகள், இருதரப்பு யோசனைகளும் பகிர்ந்துக் கொள்ளப்பட உள்ளன.
இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வி.விஜயகுமார், பி.காம். பி.ஏ. துறைத்தலைவர் தே.சந்தானகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.