கோவை மாநகரில் உள்ள பல்வேறு சாலைகளில் நூற்றுக்கணக்கான வேகத்தடைகள் (ஸ்பீட் பிரேக்கர்) உள்ளது. இந்த வேகத்தடைகளின் அளவுகள், அமைப்புகள் எல்லாமே ஐ.ஆர்.சி. (IRC) எனும் மத்திய அரசு உதவி பெரும் நெடுஞ்சாலை பொறியாளர்கள் அமைப்பு காட்டியுள்ள வழிமுறைப்படி இருப்பது அவசியம்.

2023ல் கோவை மாநகரில் உள்ள வேகத்தடைகளில் சுமார் 300 வேகத்தடைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அதில் பெரும்பான்மையானவை ஐ.ஆர்.சி. காட்டியுள்ள வழிமுறைப்படி இல்லை என்பது தெரியவந்தது.

இதற்கடுத்து 2023 நவம்பர் மாதத்தில் வேகத்தடைகளை சீரமைக்க நடவடிக்கை துவங்கியது. பல இடங்களில் வேகத்தடைகள் சீரமைக்கப்பட்டு வந்தது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்றால் அனைத்து வேகத்தடைகளும் ஐ.ஆர்.சி. குறிப்பிடும் தரத்துக்கு மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சுமார் 1.5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கோவையில் உள்ள பல இடங்களிலும் வேகத்தடைகள் ஒவ்வொன்றும் ஒரு ரகமாக உள்ளது.


குறிப்பாக டாக்டர் ராஜேந்திர பிரசாத் சாலை வழியே ராமகிருஷ்ணா சாலை செல்லும் வழியில் வரக்கூடிய ஒரு வேகத்தடை பிற வேகத்தடைகளை விட மிகவும் பெரிதாக காணப்படுகிறது.

சில வேகத்தடைகள் ஒரு பக்கம் மேடாகவும் மற்றொரு பகுதியில் சாலைக்கு சமமாகவும் காணப்படுகிறது.


வருங்காலத்தில் வேகத்தடைகள் மீது கூடுதல் கவனம் விழுமா என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Photos : DK