ரம்ஜானை முன்னிட்டு சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு!
- by David
- Mar 26,2025
Coimbatore
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
2 நாட்கள் மட்டும் வழங்கப்படும் இந்த சிறப்பு ரயில் சேவையில், மார்ச் 28ம் தேதி (வெள்ளி) இரவு 11.50 மணிக்கு, வண்டி எண் 06027 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பற்று மறுநாள் (29.3.25) காலை 9 மணிக்கு கோவை போத்தனூர் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். அதேபோல மார்ச் 31ம் தேதி இரவு 11.30 மணிக்கு, வண்டி எண் 06028, கோவை போத்தனூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் (1.4.25) காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும்.